விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! பிரதான் மந்திரி சிசான் திட்டத்தின் தவணை தொகை அறிவிப்பு!!
மத்திய அரசும், மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு வசதியாக இருக்க பல நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. பிரதான் மந்திரி சிசான் சாம்மன் நிதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த தொகையை வருடத்திற்கு மூன்று தவணை முறையாக விவசாய்களின் வாங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகிறது.
அதனை 2000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் அடுத்த தவணை எப்போது வழங்கப்படும் என்று காத்திருகிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அந்த அறிவிப்பில் ஜூலை 24 ஆம் தேதி 14 தவணை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் வங்கியில் 2000 ரூபாய் டெபாசிட் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இ கேஒய்சி முடித்த விவசாயிகளுக்கு மட்டும் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இதனை முடிக்காதவர்களுக்கு பணம் கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது