இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! சிலிண்டர் விலையில் மாற்றம்?

0
243
Good news for housewives!! Change in cylinder price?

BREAKING: இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! சிலிண்டர் விலையில் மாற்றம்?

புதிய நிதியாண்டு தொடங்கி ஒரு மாதம் நிறைவடைய இருக்கிறது.ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்தில் பல புதிய மாற்றங்களை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வருவது வழக்கம்.இந்த புதிய மாற்றங்கள் மே 01 முதல் செயல்படுத்தப்படுகிறது.

வங்கி மினிமம் பேலன்ஸ் இருப்பு,ஜிஎஸ்டி,ஆதார் அப்டேட் கட்டணம்,சிலிண்டர் விலை என்று பல மாற்றங்கள் அடுத்த மாதத்தில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது.

இதில் சிலிண்டரின் விலை மே மாதத்தில் குறைந்து விற்பனையாக வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நம் நாட்டில் ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில் LPG கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.சிலிண்டர் விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் மே 01 அன்று சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவது தான் என்று சொல்லப்படுகிறது.கச்சா எண்ணெய் விலைகுறைவால் பெட்ரோல்,டீசல் விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக உள்ளது.அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.1930 ஆக இருந்து வருகிறது.இந்த மாதம் முடிவடைய இன்னும் ஒரு தினம் மீதம் இருப்பதினால் மக்கள்,சிலிண்டர் விலையில் வரக் கூடிய மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர்.