தமிழகத்தில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக திராவிட மாடல் அரசு பல்வேறு முன்னோடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உருவாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் நலவாரம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
3300 பேர் உறுப்பினர்களாக இணைப்பு! 2431 பேருக்கு அங்கீகார அடையாள அட்டை வழங்கல்!
பத்திரிகையாளர்களின் நலனை முன்னிலைப்படுத்தி, இதுவரை 3300 பேர் நலவாரியத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 2431 செய்தியாளர்களுக்கு அங்கீகார அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதிபடுத்தியுள்ளார்.
பத்து ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பத்திரிகைத் துறையினர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதோடு, அங்கீகார அடையாள அட்டைகளுக்கான குழு கூட அமைக்கப்படாமல் பத்திரிகையாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். ஆனால், திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர உத்தரவுகளுடன் இந்த அவலத்தை முறியடித்து அங்கீகார அட்டைகள் வழங்கும் பணியை துவக்கினார்.
21 வகை நலத்திட்டங்கள்: கல்வி உதவியிலிருந்து திருமண உதவி வரை
பத்திரிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 21 வகையான நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவை கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மற்றும் சுகாதாரச் சேவைகளையும் உள்ளடக்கியது.
ஓய்வூதியமும் நிதி உதவியும்
பத்திரிகையாளர்களின் உரிமைகளைக் காக்கும் தைரியமான முடிவுகளுடன், மறைந்த செய்தியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும், ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கருத்து சுதந்திரத்திற்கு உறுதுணையாக முதல்வர் ஸ்டாலின்
“நான் முதலில் பத்திரிகையாளன்; பிறகு தான் அரசியல்வாதி” என கூறிய முத்தமிழறிஞர் கலைஞரின் வார்த்தைகளுக்கு பக்கபலமாக செயல்படும் முதலமைச்சர், கருத்து சுதந்திரத்தை உறுதியாக பாதுகாக்கும் பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார்.