மருத்துவ மாணவர்களுக்கு குட் நியூஸ்! உக்ரைன் வெளியிட்ட அறிவிப்பு!
உக்ரைன் மற்றும் ரஷ்யா கிடையே 15நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகின்றது.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணமாக உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல நாடுகள் தங்களின் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.அந்தவரிசையில் அமெரிக்கா தனது வங்கி செயல்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தி வைத்துள்ளனர்.இவ்வாறு இருக்கையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரில் இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கிக் கொண்டனர்.இவர்களை மீட்பதில் இந்தியா அதிகளவு தீவிரம் காட்டியது.அதுமட்டுமின்றி இந்த இந்திய மருத்துவர்களை மீட்கும் பணிக்கு ஆப்ரேஷன் கங்கா என பெயர் சூட்டப்பட்டது.
இந்த போரினால் இரண்டு இந்திய மனாவர்களின் உயிரிழந்தனர்.மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களின் படிப்பு இந்தியாவிலேயே தொடர வேண்டுமென்று பல மாநிலங்களும் மத்திய அரசை கேட்டு வந்தது.ஏனென்றால் தற்போது வரை அங்கு போர் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நடந்து வருகிறது.இவ்வாறு இருக்கையில் மணாவர்களின் மருத்துவ படிப்பு வீணாக கூடும் என்பதால்,இந்தியாவிலேயே மருத்துவ படிப்பை தொடர வழி செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டு வந்தனர்.ஆனால் மத்திய அரசோ இதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
தற்போது உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகம் ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,மருத்துவ மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுப்பதாக தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பால் மருத்தவ மாணவர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.ஆனால் மருத்துவ படிப்பிற்கு செயல்முறை கல்வி தான் மிகவும் முக்கியம்.ஆனால் போர் எப்பொழுது முடியும் என்று தெரியாததால் இவ்வாறான முடிவுகளை உக்ரைன் மருத்துவ பல்கலைக்கழகம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.மாணவர்களுக்காக பாதுகாப்பான இடத்திற்கு சென்று பாடங்கள் எடுப்பதாக உக்ரைன் மருத்துவ ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல மாணவர்களுக்கு தேர்வுகளும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.