வாகன ஓட்டுநர்களுக்கு வெளியான நற்செய்தி! இனி டோல்கேட்டில் கட்டணம் கிடையாது!

0
190

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து தற்சமயம் அதிகரித்திருக்கிறது. ஆகவே கடந்த 2018 ஆம் வருடம் அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை 4 வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. மாமல்லபுரம், புதுச்சேரி, உள்ளிட்ட நகரங்களுக்கிடையிலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில், இந்தச் சாலையில் வெங்கம்பாக்கம் மற்றும் புதுச்சேரி எல்லையை ஒட்டி இருக்கக்கூடிய அனுமந்தை உள்ளிட்ட இடங்களில் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங்கி வரும் தமிழக சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது.

அதேபோல பழைய மாமல்லபுரம் சாலையில் பூஞ்சேரி மற்றும் சட்ராஸ் அருகே 2 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்சமயம் மாமல்லபுரம், புதுச்சேரி, இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை 4 வழியாக விரிவாக்கம் செய்வதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக 1270 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்படைத்திருக்கிறது. ஆகவே 4 இடங்களிலும் சுங்கவரி வசூல் நேற்று முதல் நிறுத்தப்பட்டிருக்கிறது.