மக்களுக்கு குட் நியூஸ்.. நியாய விலை கடைகளில் ஒரு பாக்கெட் பாமாயில் இலவசம்!!
தமிழக அரசு நியாய விலை கடைகளில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அட்டை தாரர்களுக்கு அரிசி,கோதுமை இலவசமாகவும் சர்க்கரை கிலோ,25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன.சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ்,1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்;1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நியாய விலை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க பெறுவதால் பொதுமக்களுக்கு இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கின்றது.PHH,PHH- AAY,NPHH,NPHH-S ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டும் நியாய விலை பொருட்கள் வாங்க முடியும்.இதில் NPHH-S குறியீடு கொண்ட அட்டையை தவிர்த்து மற்ற அட்டைகளுக்கு அரசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரிசியை தொடர்ந்து சமயலுக்கு உபயோகிக்கும் பாமாயில் ஒரு லிட்டர் பாக்கெட் இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே 1 லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனுடன் சேர்த்து 1 லிட்டர் பாமாயில் வழங்க ஆலோசனை நடத்தி வருகிறது.இதற்காக சுமார் 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட உள்ளதென்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.