Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிஎப் வாங்குபவர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

பிஎப் வாங்குபவர்களுக்கு  மகிழ்ச்சியான செய்தி! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

இந்த கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அரசின்  விதிமுறைகளை கடைப்பிடித்து வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அதனைத்தொடர்ந்து வைப்பு நிதி வைத்திருப்பவர்கள் தங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது.தற்போது கொரோனா தொற்றால் மக்கள் வெளியே வரதா சூலில் உள்ளனர்.

அக்காரணத்தினால் பலர் தனது பிஎப் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.அதனால் கால அவகாசத்தை நீடிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர்.அந்தவகையில் மக்களின் கோரிக்ககையை கருத்தில் கொண்டு அரசாங்கம் வைப்புநிதி வைத்திருப்பவர்கள் தங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கு செப்டம்பர் 1 –ம் தேதி வரை கால அவகாசத்தை தந்துள்ளனர்.அதனால் மக்கள் அந்த கால அவகாசத்தை பயன்படுத்திக்கொண்டு ஆதார் எண்ணை இணைத்து கொள்ள வேண்டும்.

இது மக்களின் நலன் கருதியே அரசாங்கம் கூறுகிறது.தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பல மோசடிகளில் மக்கள் சிக்கிக் கொள்கின்றனர்.அதனை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் இதனை நடைமுறை படுத்த உள்ளது.வைப்புநிதி உள்ள மக்கள் அனைவரும் இந்த கால அவகாசத்தை பயன்படுத்திக்கொண்டு தங்களின் ஆதாரை இணைத்து கொள்ள வேண்டும்.

Exit mobile version