TN Government: நம் தமிழக அரசு கூட்டுறவு துறை சார்பில் தீபாவளி பண்டிகை போல் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு பண்டிகை காலங்களில் பல வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை பொழுதும் பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியது. பண்டிகை என்பது மக்களோடு மக்களாக கலந்த ஒன்று. அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு தொகுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஏனென்றால் பொங்கல் பண்டிகை காலங்களில் நம் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் மற்றும் கரும்பு, அரிசி, சர்க்கரை என மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தரப்படும் பொருட்கள் ஆகும். மேலும் பொங்கலுக்கு தரப்போகும் ரூ.1000 மற்றும் மாதந்தோறும் அரசு தரும் உதவித்தொகை ரூ.1000 என இரண்டும் சேர்த்து 2000 அரசு தரும் என எதிர்பார்க்கிறார்கள். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு ஆர்வம் பற்றி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த சிறப்பு தொகுப்பு மக்களுக்கு தர முக்கிய காரணம் ஏழை, எளிய மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக தரப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் பண்டிகை காலங்களில் மக்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும் வரும் பண்டிகைகளுக்கு மக்கள் சிறப்பாக கொண்டாட அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.