RRB தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!பிப்ரவரி 16 வரை நீட்டிக்கப்பட்ட தேர்வு விண்ணப்ப அவகாசம்!!
இந்தியன் ரயில்வேஸில் உள்ள 1036 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நாள் பிப்ரவரி 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் அதனை நீட்டிக்க கோரிக்கைகள் எழுந்தது.
இந்த கோரிக்கைகளை தொடர்ந்து தற்பொழுது RRB தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் பிப்ரவரி 16ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த விண்ணப்பங்களை திருத்துவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 17 முதல் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
RRB தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை :-
✓ RRB இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைய வேண்டும்.
✓ அமைச்சக மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆட்சேர்ப்பு 2025 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
✓ தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடியவர்களின் தரவுகளை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
✓ இதற்கான விண்ணப்ப கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
✓ மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவ வீரர், எஸ்சி, எஸ் டி, சிறுபான்மையினர் போன்றவர்களுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 400 ரூபாயாகும்.