Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்களும் விமானத்தில் செல்லலாம்!

Good news for Sabarimala devotees! Now you can fly too!

Good news for Sabarimala devotees! Now you can fly too!

சபரிமலை: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு விமான துறை இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.

வருடந்தோறும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வது வழக்கம். இதை தொடர்ந்து சபரிமலையில் 2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள்.

அதற்கு அடுத்த நாள் (நவம்பர்) 16-ந் தேதி கோவில் நடை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். இதையடுத்து டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு கோவில் நடை சாத்தப்படும். மேலும் கோவில் டிசம்பர்-30 தேதி  மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும். மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி-14 தேதி மகரவிளக்கு பூஜை நடக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சபரிமலை பக்தர்கள் விமானத்தில் செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பக்தர்கள் விமானத்தில் செல்லும் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதித்துள்ளது. ஆனால் இந்த வாய்ப்புகள் சபரிமலை செல்லும் காலங்களில் மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இது மட்டும் அல்லாமல் பக்தர்களை விமானத்தில் அனுமதிக்க பல்வேறு சோதனைகள் நடத்திய பிறகு அனுமதிக்கபடுவார்கள் என விமான துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த முறை உடனடியாக அமல்படுத்தப்படும் என விமான துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தற்போது முதல் ஜனவரி மாதம் 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version