பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஆகஸ்ட் 05 ஆம் தேதி விடுமுறை!!
தூத்துக்குடி மாவட்டத்தில் 442வது பனிமய மாதா பெருவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகின்ற ஆகஸ்ட் 05 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுருக்கிறார்.
பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட சுமார் 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமாகும்.இந்த பனிமய மாதா அலயத்தில் வருகின்ற ஜூலை 26 அன்று திருவிழா தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி 12 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தூய பனிமய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5 ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.எனினும் அத்தியாவசிய பணிகள்/பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 05 அன்று விடப்படும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட்10 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.