பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!!

0
149
#image_title

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! காலாண்டு தேர்வு விடுமுறை மேலும் நீட்டிப்பு!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டிற்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகின்ற 27 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கப்பட்டது.அதே சமயம் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வருகின்ற செப்டம்பர் 27 ஆம் தேதியுடன் தேர்வு நிறைவு பெரும் நிலையில் அதன் பின் 5 நாட்கள் காலாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இதனால் மாணவர்கள் சோகத்தில் இருக்கின்றனர்.காரணம் இந்த ஆண்டு காலாண்டு விடுமுறைகளில் 2 நாட்கள் அரசு விடுமுறைகளில் கழிந்து விடுகிறது.1 நாள் வெள்ளி மற்றும் 2 நாட்கள் வழக்கம் போல் மாணவர்களுக்கு விடப்படும் சனி,ஞாயிறு விடுமுறை.அதன்படி செப்டம்பர் 28 மிலாடி நபி,செப்டம்பர் 29 வெள்ளி கிழமை,செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 சனி,ஞாயிறு,அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி.

காலாண்டு தேர்வு எப்பொழுது முடியும்,விடுமுறையை சந்தோசமாக கழிக்கலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த மாணவர்களுக்கு அரசு அளித்துள்ள 5 நாள் விடுமுறையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.இதனால் விடுமுறையை மேலும் நீடிக்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

தமிழகத்தில் பருவ மழை தொடங்க இருக்கும் காரணத்தினால் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு விடுமுறை நாட்களை நீடிக்க வேண்டுமென்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தற்பொழுது பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திலிருந்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.

காலாண்டு தேர்வு விடுமுறை 5 நாட்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் என்எஸ்எஸ் சிறப்பு முகாம் பள்ளி மாணவர்களுக்கு 7 நாட்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் காலாண்டு விடுமுறை மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குனரம் விரைவில் அறிவிக்கும் என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.