Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!

Good news for students! CBSE exams canceled across the country!

Good news for students! CBSE exams canceled across the country!

மாணவர்களுக்கு குட் நியூஸ்! நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!

இக்காலத்தில் கொரோனாவால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களையும் இழந்து வருகின்றோம்.தற்போது உலகளவில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்ககோரி அந்நாட்டின் அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.அதுமட்டுமின்றி தமிழ்நாட்டில் மீண்டும் பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக அளவு கொரோனா தொற்று பரவிய நிலையில் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.

12வகுப்புகளுக்கு தேர்வு நடத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.அதனால் மத்திய காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி மத்திய அரசிடம் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.அதில் அவர் கூறியது,சிபிஎஸ்இ 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் மே 4 தொடங்கயிருக்கிறது.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வரும் நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

அவ்வாறு தொற்று பரவினால் தேர்வு மையம் முழுவதும் கொரோனாவின் தீவீர மையமாக மாறிவிடும் என்று கூறினார்.அதுமட்டுமின்றி இந்த கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் மாணவர்களை தேர்வெழுத வைப்பது அவர்களுக்கு தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும்.அவ்வாறு தேர்வு எழுதி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அதன் முழு பொறுப்பும் மத்திய அரசும் சிபிஎஸ்இ வாரியமும் தான் பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அதற்கடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஎஸ் தேர்வுகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். 1 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதிக அளவு கொரோனா பரவ வாய்புகள் உள்ளது.அதனால் இந்தேர்வு நடத்துவதில் மறு பரிசீலனை நடத்த வேண்டும்.இந்த கொரானாவின் 2வது அலை மிகவும் மோசமானது அந்தவகையில் என்னிடம் உள்ள தகவலின் படி கடந்த 24மணி நேரத்தில் டெல்லியில் 13,500 பேருக்கு கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுகளை ஆன்லைன் முறைப்படி நடத்தலாம் என இவ்வாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அந்தவகையில் பிரதமர் நரேந்திரமோடி மத்திய கல்வித்துறை மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்,அப்போது மத்திய கல்வித்துறை கூறியது,கொரோனாவின் 2வது அலை மிகவும் அதிவேகமாக பரவி வருவதால் சிபிஎஸ்இ 10வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என வெளியிட்டுள்ளனர்.12 ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூடம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.இதனால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Exit mobile version