பிரதமர் நரேந்திர மோடியால் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்ட இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கால அவகாசமானது தற்பொழுது நீட்டிக்கப்பட்ட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதான் மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டமானது மாணவர்கள் விண்ணப்பிக்க மார்ச் 12 2025 வரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 31 2025 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது எனவே இந்த திட்டத்தில் இணைய நினைக்கும் இளைஞர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்யும் படியும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 730 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு லட்சம் மாணவர்கள் இந்தியாவில் சிறந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அதனோடு கூட மாதம் 5000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த இன்டர்ன்ஷிப் திட்டமானது ஜூலை மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் வெளியிடப்பட்ட பட்ஜெட் தாக்கலின் பொழுது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1 வருடத்திற்கான இந்த இன்டர்ன்ஷிப் மூலம் 12 மாதங்களும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அதில் 11 மாதங்கள் 5000 ரூபாய் உதவி தொகையாகவும் இறுதியாக 12 வது மாதம் மட்டும் 6000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அதனை தொடர்ந்து சிறந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.