மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 18ஆம் தேதி இந்த மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!
கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. உலக நாடுகள் மத்தியில் அனைவரின் பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்தது. இந்தத் தொற்று பாதிப்பால் மாணவர்களின் படிப்பு பெரும் அளவு பாதிப்பை கொடுத்தது. ஏனென்றால் தொற்று அதிக அளவு பரவாமல் இருக்க அரசாங்கம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுவித்து விட்டது. அவர் வீடு பறித்துவிட்டு ஆன்லைன் முறையிலேயே பாடங்கள் நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையோரிடம் ஆன்லைன் பாடங்களை படிக்க செல்போன் இல்லை. இதனால் மாணவர்கள் பெருமளவு அவதிப்பட்டனர்.
ஒரு மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதும் அடுத்த மாதம் தொற்று பாதிப்பு அதிகரித்து விடுப்பு அளிப்பதாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. இதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பொதுத் தேர்வு அடிப்படையில் தான் அடுத்த கட்டத்திற்கு மாணவர்களில் எடுத்து செல்ல முடியும். அவரான பொது தேர்வை வைக்க முடியாத சூழல் நிலவி விட்டது. தற்போது தான் மூன்றாவது அலை குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.
10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. மே மாதம் முதல் அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ளது. இவற்றில் பல பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவிழாக்கள் நடத்தவும் அரசாங்கம் தடை விதித்திருந்தது. தற்பொழுது தொற்று பாதிப்புகள் குறைந்து நிலையில் ஆங்காங்கே திருவிழாக்கள் நடக்க அனுமதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு மக்கள் கூட்டம் கூடும் என்பதால் இந்த திருவிழாவை நடத்த வில்லை. இந்த ஆண்டு தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் விமர்சையாக திருவிழா நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவானது இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ராமேஸ்வரம் பரமக்குடி குயவன்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் முருகன் கோவில்கள் அதிக அளவில் உள்ளது. அங்கேயும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.
இவற்றைக் காண பக்தர்கள் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து வருவர். இவ்வாறு இருக்கையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடுவர். இந்த இரு மாவட்டங்களிலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வருவர். மக்களின் நலன் கருதி கூட்டத்தை கட்டுப்படுத்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உள்ளார். அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் ஆட்சியரை கேட்டுள்ளனர். இரு மாவட்டங்களிலும் மக்கள் கூட்டம் அதிக அளவு கூடும் என்பதால் உள்ளூர் விடுமுறை அளிப்பது நல்லது என்று மக்கள் எண்ணுகின்றனர்.