மாணவர்களுக்கு குட் நியூஸ்! வரும் 26-ம் தேதி முதல் இது தொடக்கம்!
கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கும் வகையில் முழு ஊரடங்கு 2020 ஆண்டு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்றானது மாணவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசாங்கம் விடுமுறை அளித்தனர்.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது. ஆறு மாதங்களாக நிலவிய ஊரடங்கு தொற்று குறைந்த உடன் மக்கள் வெளியே செல்ல அனுமதி தந்தனர்.
ஆறு மாதங்களில் கொரோனா தொற்றானது குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.அவ்வாறு திறந்து ஓரிரு நாட்களில் மாணவர்களுக்கு தொற்றானது அதிகளவு பரவ ஆரம்பித்தது.அதனையடுத்து மீண்டும பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது.அதனையடுத்து இந்நாள் வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை.அதுமட்டுமின்றி அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கம் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தது.
கேரளா மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா விதிமுறைகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது.சென்ற வாரம் தான் அந்த தேர்வு முடிவுகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கடுத்ததாக நமது தமிழகத்தில் இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.இந்த ஆண்டு எந்த மாணவர்களும் 600 க்கு 600 எடுக்கவில்லை என தெரிவித்தனர்.சில மாணவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வரவில்லை என கூறுகின்றனர்.அவ்வாறு கூறும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை மறுபரிசீலனை செய்து கொள்ளலாம் என்றும் அரசாங்கம் தெரிவித்தது.
தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அடுத்தகட்டமாக கல்லூரிகள் சேர்ப்பு வரும் 26 –ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.26 ஆம் தேதி மாணவர்கள் அனைவரும் தாங்கள் சேர உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கிலாம் எனக் கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி இம்முறை மாணவர்கள் பொறியியல் படிப்புகளை காட்டிலும் கலை அறிவியல் கல்லூரிகளிலே சேர அதிக ஆர்வம் காட்டுவதாகவும் கூறினார்.