மாணவர்களுக்கு குட் நியூஸ்! புத்தகத்தை பார்த்து எழுத புதிய உத்தரவு!
கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை உலுக்கி எடுத்துவிட்டது.இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தது.அதனைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுக்கப்பட்டது.அதில் நூற்றுக்கு 60 சதவீத மாணவர்களே ஆன்லைன் மூலம் பாடங்களை கற்றனர்.மீதமுள்ளவர்களால் பாடங்களை கற்க முடியவில்லை.
அதன்பின் கொரோனா தொற்றானது சிறிதளவு குறையவே சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனையடுத்து பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டது.மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சமூக இடைவெளிகள் பின்பற்றி பாடங்களை பையிலுகின்றனர்.இருப்பினும் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரி ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைவருக்கும் கொரொனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.
மேலும் கும்பகோணத்திலுள்ள தனியார் பள்ளிகளில் 25 ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையானது அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தனியார் கல்லூரிகள் அனைவரும் ஆலோசனை நடத்தினர்.அதில் தனியார் கல்லூரிகள் கூறுவது,கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று காரணத்தால் விடுப்பு அளிக்கப்படும் என மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டனர்.
அதன்பின் மே மாதம் முதல் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் என அரசாங்கம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது.தற்போது அந்த தேர்வுகளை,புதிய நடைமுறையில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.அன்மையில் வெளியான தேர்வு முடிவுகளில் 60% அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.அதனால் அதனால் வரும் செமஸ்டர் தேர்வுகளில் ஆன்லைனில் எழுதும் போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி தந்துள்ளது.இதனால் 90% மாணவர்கள் தேர்ச்சி பெற முடியும்.இத்தேர்வில் பாடங்களுக்கு நேரடியாக பதிலளிக்கும் வகையிலும்,பாடங்களை புரிந்து பதிலளிக்கும் வகையிலும் கேள்விகள் கேட்கப்படும் என தெரிவித்துள்ளனர்.இந்த பயன்பாடானது இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தவிர்த்து மற்ற அனைவருக்கும் நடத்தப்படும்.இறுதி ஆண்டு செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் பழைய முறையிலேயே ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.