மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:! எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு!

0
140

மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி:!
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவச உயர்கல்வி படிக்க வாய்ப்பு!

பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதி உடைய மாணவர்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக உயர்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் என்று,இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் அவர்கள் கூறியுள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும் பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் 2019 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட,பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்கல்வி மேற்கொள்ள முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய,தகுதியான மாணவர்கள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக உயர்கல்வி பயின்று வருகின்றனர்.இந்நிலையில்
அவர்கள் இரண்டாம் ஆண்டு செல்லும் நிலையில் இந்த ஆண்டு மீண்டும் புதிதாக 300 மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்படும் என்று பாரிவேந்தர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதன்படி பெரம்பலூர் தொகுதியில் உள்ள,பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து உயர்கல்வி மேற்கொள்ள முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள்,கலை அறிவியல்,பொறியியல்  மேலாண்மை,தோட்டக்கலை உள்ளிட்ட துறைகளில் இலவசமாக கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான 300 பேர் இலவச கல்வி பயில தேர்வு செய்யப்படவுள்ளனர். இதன் மூலம் தேர்வு செய்யப்படும்  செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் இலவசம் என்றும் பாரிவேந்தர் கூறியுள்ளார். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மாணவர்கள் இலவசமாக உயர்கல்வி பயில ஆன்லைன் மூலம் செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

http://www.ijkparty.org மற்றும் http://www.srmist.edu.in என்ற இணையதளம் வாயிலாக பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.