உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!

Photo of author

By Rupa

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு குட் நியூஸ்! இனி நீங்கள் இந்தியாவிலேயே படிக்கலாம்!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே ஓர் மாதம் காலமாக போர் நடைபெற்று வருகிறது.உக்ரைன் மக்களின் நலன் கருதி ஓர் சில இடங்களில் மட்டும் ரஷ்யா போர் தொடுப்பதை நிறுத்தியது.உக்ரைனின் அனு உலையை தாக்கியது.அந்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதற்கடுத்த படியாக உக்ரைனில் இருந்த மகப்பேறு மருத்துவமனையை தாக்கியது.இதனை உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்தது.ரஷ்யாவில் வணிக சேவை வைத்துக்கொள்வதை இதர நாடுகள் நிறுத்தியது.மேலும் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற மாணவர்களை மீட்க இந்தியா முக்கிய பங்கை வகித்தது.

இருப்பினும் இந்த போரில் நமது இந்தியாவை சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.தற்பொழுது மனாவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.இருப்பினும் தற்போது வரை போர் தொடர்ந்து வருவதால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.சில கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.மருத்துவ படிப்பிற்கு செய்முறை தேர்வு மிகவும் முக்கியமான ஒன்று.ஆன்லைன் மூலம் எந்த அளவிற்கு பாடங்களை கற்பிக்க முடியும் என்பது சந்தேகமே.மணவர்கள் இந்தியாவில் உள்ள கல்லூரிகள் சேர மத்திய அரசை மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது.

வெறும் மருத்துவ படிப்பு மட்டுமின்றி தொழில்நுட்ப படிப்பு படிப்பதற்கும் உக்ரைனுக்கு பல மானவர்கள் சென்றுள்ளனர். அவர்களும் தற்பொழுது எந்த விதத்தில் படிப்பது என்று தெரியாமல் உள்ளனர். அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இந்தியாவிலுள்ள அனைத்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் கூறியிருப்பது, உக்ரைனில் போர் காரணமாக மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படித்த வந்த மாணவர்களின் படிப்பு தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருந்தால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகிவிடும். அதனால் தொழில்நுட்பப் படிக்கச் சென்ற மாணவர்களுக்கு தற்போது உள்ள பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் சீட் தருமாறு கேட்டுள்ளனர். அதுமட்டுமின்றி உக்ரைனில் படிக்க சென்ற மாணவர்கள் எந்த பாடப்பிரிவை மற்றும் எந்த கல்வியாண்டில் வெளியேறினார்களோ அந்த ஆண்டில் சேர்ந்து படிக்க அனுமதி தர வேண்டும் என கூறியுள்ளது. இதனால் உக்கிரைன் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேலோங்கி காணப்படும். மேலும் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர பெரும் உதவியாக இருக்கும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version