மாணவர்களுக்கு குட் நியூஸ்!! பள்ளிகல்வித்துறை புதிய செயலி அறிமுகம்!!
அனைத்து மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனையடுத்து அதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் 25 பேரை தேர்வு செய்து வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த விருதுகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் விருதுகள் வழங்கப்பட என்றும் நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக காணொலி வாயிலாக பாடங்களை கற்றுக்கொடுக்க ஒரு புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியை பயன்படுத்தி மாணவர்களில் எளிதில் படங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திய “மணற்கேணி” என்ற செயலியை பயன்படுத்தி தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் 27000 கருப்பொருள்களாக வகுப்புகளை தாண்டி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது.
மேலும் இந்த செயலியை ஆசிரியார்கள் பயன்படுத்தி அதில் உள்ள பாடப்பொருடகளின் உதவியை பெற்று மாணவர்களுக்கு புரியும்படி படங்களை நடத்தலாம் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.