Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

#image_title

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நாளை18- ஆம் தேதி சனிக்கிழமை மாசி மாதம் மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை வந்து சேரும் என்பது புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பல நாட்களிலும் செய்கின்ற பூஜையின் பலனை மகா சிவராத்திரி அன்று செய்கின்ற பூஜையின் பலம் கொடுத்து விடும் என்கின்றனர்  சித்தர்கள்.

சிவனுக்கு உகந்த இந்த நாளில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் இரவு முழுக்க சிறப்பு பூஜைகள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் சிவராத்திரி அன்று  மாணவர்கள் அதைக் கொண்டாடும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதனை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version