தமிழக அரசு கல்விக்காக பல நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் தற்பொழுது சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு தங்குவதற்கு விடுதி கிடைக்காமல் அவதிப்படும் நிலையினை மாற்ற புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னையில் உயர்கல்வி படிக்க வரும் மாணவர்களுக்கு விடுதி கிடைக்காமல் தனியே ரூம் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான வாடகையில் ரூம் எடுப்பதுடன் உணவிற்கு தனியாக பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதால் மாணவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்காக தமிழக அரசு இலவச தங்கும் விடுதி திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
2024-2025 ஆம் ஆண்டிற்கான புதியதாக துவங்கப்படவுள்ள அரசு சிறுபான்மையினர் நலக்கல்லுாரி மாணவர் விடுதி சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல தொழிற்பயிற்சி மாணவர் விடுதியுடன் கூடுதலாக இணைந்து செயல்பட உள்ளதால் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் மேற்படி கல்லூரி விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு விடுதியில் தங்கிப் பயலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் :-
✓ விடுதி மாணவ / மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
✓ கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு ஜமக்காளம், போர்வை வழங்கப்படும்.
✓ விடுதியில் தங்கிப்பயிலும் மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கென மாதம் ரூ.150./ வீதம் 10 மாதங்களுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் ECS மூலம் வரவு வைக்கப்படும் போன்ற சலுகைகள் வித்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
மேலும் இத்திட்டத்திற்கு தகுதியானவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு இரண்டு லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சென்னை மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லுரரி விடுதியில் தங்கிப் பயில இடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான மாணவர்கள்சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 6ம் தளத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்று பயனடையுமாறு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.