இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. இனி LPG கேஸ் சிலிண்டர் வெறும் ரூ.450க்கு பெற்றுக் கொள்ள முடியும்!!
நாட்டில் LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் குடும்பங்கள் அதிகம்.மத்திய அரசாங்கத்தின் உஜ்வலா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் இலவச கேஸ் இணைப்பை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் விலை ரூ.1000 வரை கடந்து சாமானியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியது.ஆனால் இந்த மாத தொடக்கத்திலிருந்து சிலிண்டர் விலை சற்று குறைந்து விற்பனையாகி வருகிறது.
தொடர் விலைவாசி உயர்வால் ஏழை மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரும் போராட்டமாக இருந்து வரும் நிலையில் சிலிண்டர் வெறும் ரூ.450க்கு கிடைக்கும் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தின் மூலம் ஒரு சிலிண்டரை வெறும் ரூ.450க்கு பெற்றுக் கொள்ள முடியும்.இதற்கு LPG ஐடியை ஜன் ஆதாருடன் இணைக்க வேண்டும்.ஆனால் இந்த திட்டத்தின் பயனாளிகள் பலர் தங்களது ஜன் ஆதாரை LPG ஐடியுடன் இதுவரை இணைக்கவில்லை.இதனால் அவர்களுக்கு மானியத்தில் கேஸ் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
உஜ்வலா திட்டத்தின் மூலம் ரூ.450க்கு சிலிண்டர் பெறுவது எப்படி?
இதற்கு நீங்கள் LPG ஐடியை ஜன் ஆதாருடன் இணைக்க வேண்டும்.இந்த வசதியை ரேசன் கடைகள் மூலம் அரசு வழங்கி வருகிறது.தங்களுக்கு அருகில் இருக்கின்ற ரேசன் கடையில் ஜன் ஆதார் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பிறகு ஜன் ஆதாருடன் இணைக்கப்பட்ட LPG ஐடியை பெற வேண்டும்.அதேபோல் உஜ்வலா திட்ட பயனாளிகள் e-KYC செய்திருக்க வேண்டும்.இந்த சேவையும் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.இதையெல்லாம் முறையாக செய்தால் மட்டுமே மானியம் மூலம் ரூ.450க்கு LPG சிலிண்டர் பெற முடியும்.