Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! அனைவருக்கும் இலவசமாக வீடு வழங்கும் திட்டம்!

Good news for the people of Tamil Nadu! Free housing scheme for all!

Good news for the people of Tamil Nadu! Free housing scheme for all!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்! அனைவருக்கும் இலவசமாக வீடு வழங்கும் திட்டம்!

தமிழகத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியாக பல்வேறு வாக்குறுதிகள் அளித்தனர்.அதில் திமுக வாக்குறுதியாக மகளிர்களுக்கு அரசு பேருந்துக்களில் கட்டணம் இல்லாத பயணசீட்டு வழங்கப்படும்.நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்ட நிலையில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விஷ்வந்தாங்கல்,கீழ் சிறுபாக்கம், நல்லவன் பாளையம், கீழ் செட்டிபட்டு, மேல் செட்டிபட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளில் மக்கள் குறை கேட்டு முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார்.மேலும் அவர் மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் எ.வ வேலு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் கூறுகையில் முறையான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.முறையற்ற மற்றும் தகுதியற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.உங்களுடைய கோரிக்கை ஏன் நிறைவேற்றபட்டது.ஏன் நிறைவேற்றப்படவில்லை என அதிகாரிகள் தகுந்த விளக்கம் தருவார்கள் என குறிப்பிட்டார்.

தமிழகத்தில் அடுத்த ஐந்து வருடங்களில் யாருமே வீடு இல்லாமல் இருக்க மாட்டார்கள்.ஏனென்றால் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் அடுத்த ஐந்து வருடங்களுக்குள் இலவச வீடு கட்டி தரப்படும்.தமிழகத்தில் குடிசை வீடு என்பது இருக்காது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version