Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொதுமக்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு! இனி அனைத்தும் உள்ளங்கையில்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

முன்பெல்லாம் அமைச்சர்கள், முதலமைச்சர், சட்டசபை உறுப்பினர், உள்ளிட்டோரை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிலும் சாதாரண, சாமானிய, மக்கள் அவர்களை தூரத்தில் இருந்து பார்ப்பது கூட மிகவும் அரிது.

அந்த நிலையில்தான் இருந்தது தமிழக அரசியல் தமிழக அரசியல் இருந்தது என்று சொல்வதை விட மக்களின் நிலை அந்த அளவிற்கு இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆனால் தற்சமயம் அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது, சமூக வலைதளங்கள் இருக்கிறது, பிரதமராக இருந்தாலும் கூட அவரை உடனடியாக சந்தித்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், அரசின் அன்றாட நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ள வசதியாக அரசு செய்திகள் அனைத்தும் இனி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. என செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்திருக்கிறது.

தமிழக முதலமைச்சரின் அறிவிப்புகள், அரசின் திட்டங்கள், சாதனைகள், அரசு சார்ந்த செய்திகள் புகைப்படங்கள் காணொளி பதிவுகள் அரசானைகள் அனைத்தும் ட்விட்டர் முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்டவற்றில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.

அதோடு சட்டசபை நிகழ்ச்சிகள் மற்றும் முதலமைச்சர் பங்குபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது என சொல்லப்படுகிறது.

ஆகவே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலமாக tndipr என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதளப் பக்கங்கள் பொதுமக்கள் பின்தொடர்ந்து அரசின் அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என்று செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்திருக்கிறது.

Exit mobile version