ஒருவர் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் எனில் பெரும்பாலும் தேர்வு செய்வது ரயில் பயணத்தை மட்டுமே. காரணம் ரயிலில் உள்ள சேவைகள் மற்றும் அதனுடைய சேவை கட்டணம். இப்படி பல லட்சம் மக்கள் அன்றாட வாழ்வில் தேர்ந்தெடுக்க கூடிய ரயில் பயணத்தில் நிறைய சிக்கல்களும் உள்ளன. அவற்றை போக்கும் விதமாகவும் ரயிலில் பயணம் செய்யக்கூடிய பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் இந்தியன் ரயில்வே துறை புதிய எண் ஒன்றினை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த எண்ணில் புகார் அளிப்பதன் மூலம் ரயிலில் பயணம் செய்யக் கூடியவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் அருவருப்பான செயல்கள் நடந்தாலோ உடனடியாக அந்த எண்ணிற்கு ” Hi ” என்ற குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் காவல்துறையினர் அல்லது ரயில்வே துறையினருடைய குழுக்கள் உங்களுடைய இருப்பிடத்திற்கு வந்து சேரும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த எண்ணில் உள்ள சேவைகள் :-
✓ PNR நிலையைச் சரி பார்க்க..
✓ ரயிலில் உணவு ஆர்டர் செய்ய..
✓ நீங்கள் தற்போது பயணிக்கும் ரயில் எங்கு உள்ளது, எந்த நிலையம் அருகில் உள்ளது போன்றவற்றை அறிய..
✓ ரிட்டர்ன் டிக்கெட்டை ரயிலிலும் பதிவு செய்ய..
✓ ரயில் அட்டவணை அறிய..
✓ மேலும், பயிற்சியாளர் நிலையையும் இந்த எண் மூலம் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ புகார்
9881193322 என்ற தொலைபேசி எண்ணை உடனடியாக உங்களுடைய செல்போனில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்வது மட்டுமின்றி இது போன்ற அனைத்து சேவைகளையும் நம்மால் நம்முடைய இடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் எனில், உங்களுக்கு இதில் உள்ள சேவைகள் ஏதாவது தேவைப்படுகிறது என்றால் உடனே இந்த எண்ணிற்கு whatsapp மூலமாக Hi என்ற மெசேஜை முதலில் அனுப்ப வேண்டும். அதன் பின் வரக்கூடிய இந்த சேவைகளில் நமக்கு என்ன சேவை வேண்டுமோ அதனை கிளிக் செய்வதன் மூலம் நம்மால் எளிமையாக அந்த சேவையை பெற்றுக் கொள்ள முடியும் என்று இந்தியன் ரயில்வே தெரிவித்து இருக்கிறது.