Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!

Good news for those who do not pay electricity bills! Important announcement made by the Minister!

Good news for those who do not pay electricity bills! Important announcement made by the Minister!

மின் கட்டணம் செலுத்தாதோருக்குமகிழ்ச்சி செய்தி! அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு!

சென்னை கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மேலும் 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும் என்று செய்தியை தெரிவித்தார்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் மின்சாரக் கட்டணங்கள் அதற்கு உரிய தேதியில் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் தற்போது 25500 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டுள்ளன. 28000 இணைப்புகளில் மட்டுமே மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். பல இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரான மின் வினியோகம் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மின் கம்பிகள் தொங்கி எதிர்பாராத உயிரிழப்புகள் ஏற்படுவதால் சில இடங்களுக்கு மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார். சென்னையில் இரவு முழுவதும் 4 ஆயிரம் பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தேங்கியுள்ள மழைநீர் பாதிப்புகள் குறைந்த உடன் விரைவில் அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் மின் வினியோகத்தின் காரணமாக எந்த பாதிப்புமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version