ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்; இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்!
ரயில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. 8750001323 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் செய்தால் இருக்கைக்கே உணவு வந்துவிடும். முதற்கட்டமாக குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. பயணிகளியிடமிருந்து கிடைககும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று IRCTC தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், இந்திய ரயில்வேயின் PSU, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் உருவாக்கிய இணையதளமான www.catering.irctc.co.in மற்றும் அதன் இ-கேட்டரிங் செயலியான Food on Track மூலம் இ-கேட்டரிங் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. 8750001323 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் மெசேஜ் செய்தால் ரயில் இருக்கைக்கே உணவு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்களில் மட்டும் இ-கேட்டரிங் சேவைகளுக்காக வாட்ஸ்அப் தொடர்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் கருத்து மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில், எல்லா ரயில்களிலும் இந்த முறை செயல்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசியின் இணையதளம் மற்றும் செயலி மூலம் இயக்கப்பட்ட இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.