Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! 

#image_title

பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! வருகின்ற 19ஆம் தேதி இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு! 

சென்னையில் வருகின்ற 19ஆம் தேதி மெட்ரோ ரயில் சேவையானது இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை ஒட்டி இந்த நேர நீட்டிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நேரு விளையாட்டு உள் அரங்கில் வருகின்ற 19ஆம் தேதி அன்று இரவு 7 மணி முதல் 11:30 வரை நடைபெற இருக்கிறது. தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு உதவிடும் வகையில் நிதி திரட்ட  இந்த இசை நிகழ்ச்சியானது  நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த செய்தியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தின்(பெஃப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பில்  உறுதிப்படுத்தினார். சமீபத்தில் ரகுமானின் ஸ்டுடியோவில் லைட் மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் லைட்மேன்களுக்கு உதவ வருகின்ற 19ஆம் தேதி சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலரும் வருகை தர உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்காக மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை ஆனது எப்போதும் வழக்கம்போல் இரவு 11 மணி வரை தான் இயக்கப்படும். ஆனால் ரகுமானின் இசை நிகழ்ச்சி இரவு 11:30 மணிக்கு முடிவடைவதால் மெட்ரோ சேவையானது இரவு 12 மணி வரை ஒரு மணிநேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

 

Exit mobile version