இருபது மாவட்டங்களுக்கு குட் நியூஸ்! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டியின் முடிவில் தொடங்கி இன்றளவும் முடிவில்லாமல் பரவி வருகிறது.மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மீள்வதற்கு பெருமளவு சிரமபப்படுகின்றனர்.அத்தோடு ஒவ்வோர் ஆண்டு சினிமா,அரசியல் போன்றவற்றிலிருந்து பெரிய ஜாம்பாவன்களை இந்த கொரோனாவிற்கு இழக்க நேரிடுகிறது.அத்தோடு கொரோனா தொற்று சிறிதளவு குறையும் வேளையில் மக்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நடமாடுகின்றனர்.
அதுமிட்டுமின்றி கொரோனாவின் இரண்டாவது அலை ருத்ரதாண்டவம் எடுக்கும் முன்னே மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படி வலியுறுத்தி வந்தனர்.ஆனால்,மக்கள் முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவில்லை.தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் அதிகளவு உயிரிழப்புகளை இழந்த பிறகு மக்கள் கொரோனா தடுப்பூசி போட முன் வருகின்றனர்.தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி போட முன் வரும் போது ஒன்றிய அரசு தடுப்பூசி வழங்குவதில் தாமதம் செய்து வருகிறது.அவர்கள் தாமதமாக தருவதால் தமிழ்நாட்டில் தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தற்போது 20 மாவட்டங்களில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து உயிரிழப்புகள் ஏதும் நடைபெற வில்லை என்று சுகாதரத்துறை கூறியுள்ளது.தற்போது தமிழகத்தில் 2775 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதனால் கொரோனா தொற்றுக்கு மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,18,786 ஆக உள்ளது.தமிழகத்தில் 32,307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது வரை திருநங்கைகள் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி மூன்றாவது அலையை எதிர் கொள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அதனையடுத்து செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகளவு காணப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.தற்போது மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.