Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாட்ஸ் ஆப் பயனாளர்களுக்கு குட் நியூஸ்! புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள்!

உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் தளத்தின் மூலம் தனது பயனாளர்களுக்கு பல புது புது அப்டேட்டுகளை அள்ளிக்கொடுத்துள்ளது. இதனால் பயனாளர்களின் பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் இந்த அப்டேட்டுகளை கவனத்துடன் கையாளப்படுகிறது.வாட்ஸஅப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 பில்லியன் (200 கோடிக்கும்) அதிகமாக உள்ளனர்.

மேலும், இந்த வாட்ஸ்அப் செயலியின் மூலமாக உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இலவச வீடியோ கால் மூலமாக தொடர்பு கொள்ள முடியும்படியான வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வாட்ஸ்அப் நிறுவனம் பாதுகாப்பாக உள்ளதாலும் சில பணப் பரிவர்த்தனைகளையும் வாட்ஸ்அப் மூலமாகவே செய்துகொள்ள முடிகிறது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வாட்ஸ்அப் குரூப்பில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை குரூப் அட்மின் டெலிட் செய்து கொள்ளும்படியான வசதி அப்டேட் செய்யப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் செயலி மூலமாக வேறு ஒருவருக்கு தவறான குறுஞ்செய்தியை அனுப்பிவிடும் சமயங்களில் அந்த குறுஞ்செய்தி எடிட் செய்து கொள்ளும் வசதியையும் கூடிய விரைவில் வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், தவறாக அனுப்பப்பட்ட செய்தியை கிளிக் செய்து எந்த தகவலை அந்த பயனாளருக்கு அனுப்ப வேண்டுமோ அதை எடிட் செய்து அனுப்பலாம்.

மேலும், எடிட் செய்து கொள்ளும் வசதி போக ஏற்கனவே வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியை தவறாக அனுப்பிவிடும் சமயங்களில் அதனை Delete For everyone செய்து கொள்ளும்படியான வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த Delete For everyone செய்யும் வசதி 8 நிமிடங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த கால அவகாசத்தை நீட்டித்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் வரைக்கும் Delete For everyone செய்துகொள்ளும்படியான அப்டேட்டை தற்போது வழங்கியுள்ளது.

Exit mobile version