குட் நியூஸ்: இறங்கு முகத்தில் தங்கம்..! இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு..!
சென்னை,
ஆபரண தங்கத்தின் விலை அவ்வபோது உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை சரிவில் இருந்த நிலையில் அதன் பின்னர் அதன் விலை மளமளவென அதிகரிக்கத் தொடங்கி விட்டது.
இன்னும் சில மாதங்களில் தங்கம் விலை ரூ.6 ஆயிரத்தை கடந்து விடும் என்று நிபுணர்கள் தெரிவித்து வருவதால் சாமானியர்கள் கலக்கமடைந்து இருக்கின்றனர்.
என்னதான் தங்கம் விலை உச்சத்தை தொட்டாலும் அதை வாங்க ஒரு கூட்டம் இருக்கத் தான் செய்கிறது.
நேற்று 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.46,720 என்று விற்பனையானது. இந்நிலையில் இன்று அதன் விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.5,840க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.
அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.8 குறைந்து, ரூ.46,720க்கும், ஒரு கிராம் ரூ.1 குறைந்து, ரூ.5,839க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.50,968க்கு விற்பனையாகின்றது.
அதேசமயம், வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.76.50க்கும், ஒரு கிலோ ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.