குட் நியூஸ்.. இனி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் கார்டு வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!!
நம் இந்திய நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு என்று கொண்டுவரப்பட்ட திட்டம் பொது விநியோகத் திட்டம். இந்த திட்டத்தில் PHH, PHH – AAY, NPHH குறியீடு கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் முன்னுரிமை பெற்ற அட்டைதாரர்களான PHH – AAY குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ புழுங்கல் அரிசி, பச்சரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தாக PHH, NPHH குறியீடு கொண்ட அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 6 கிலோ என்ற அடிப்படையில் புழுங்கல் அரிசி, பச்சரிசி விலையின்றி இலவசமாக வழங்கப்டுகிறது.
இதை தவிர்த்து துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும் விநியோகம் செய்யப்படுகிறது. இதுவரை மாநில அரசு அந்த மாநில மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் பொருட்களை விநியோகம் செய்து வந்த நிலையில் தமிழக அரசு முதன் முதலாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேசன் அட்டை வழங்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பிகார், ஒடிசா, அசாம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வசிகின்றனர்.
இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு ரேசன் கார்டு வழங்குவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.
புலம் பெயர் தொழிலாளர்கள் இ – ஷ்ரம் என்ற வெப்சைட்டில் தாங்கள் செய்யும் தொழில் குறித்த விவரம், வசிப்பிட முகவரி, கல்வித் தகுதி, ஆதார் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் விவரம் உள்ளிட்டவைகளை கொடுத்து ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
இதன் மூலம் இனி புலம்பெயர் தொழிலாளர்களும் தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும் என்பதினால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.