Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமைச்சர் சொன்ன குட் நியூஸ்.. இந்த ஆவணங்களெல்லாம் ரெடியா வச்சுக்கோங்க!! ஆண்களுக்கு வரப்போகும் ரூ 1000!!

Good news said by the minister.. Keep all these documents ready!! Rs 1000 to come for men!!

Good news said by the minister.. Keep all these documents ready!! Rs 1000 to come for men!!

தமிழக அரசானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளின் இடைநிற்றலை தடுக்க மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து மாதந்தோறும் ஆயிரம் வழங்கும் உதவித்தொகையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி மாணவிகளுக்கு வழங்கப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதே போலவே மாதம்தோறும் ஆயிரம் வழங்கும் உதவி தொகையை நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து குடும்ப அட்டை வைத்துள்ள பெண்கள் அரசின் வரைமுறைகளுக்கு கீழிருந்தால் அவர்களுக்கும் மாதம் தோறும் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் மகன் என அனைவரும் பயன்பெறும் வகையில் ஊக்கத்தொகையை தமிழக அரசு கொடுத்து வரும் பட்சத்தில் குடும்பத் தலைவர்களுக்கு மட்டும் எந்த ஒரு உதவி தொகையும் கிடையாதா என்று கேள்வி எழுப்புள்ளனர். குறிப்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பு விடம் இந்த கேள்வி முன் வைக்கப்பட்டதையடுத்து அவர் கூறியதாவது, தற்பொழுது நாங்கள்  தங்களது அறிக்கையில் கூறியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

தற்பொழுது குடும்ப தலைவர்களும் ஆயிரம் உரிமைத்தொகை இல்லை என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். இதனின் தேவையானது எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் குடும்பத் தலைவர்களுக்கு ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிக்கையில் வெளியிடலாம் என பலரும் கூறி வருகின்றனர்.

Exit mobile version