நற்செய்தி! இனி பெண்களோடு திருநங்கைகளும் இலவச பயணம் மேற்கொள்ளலாம்!

0
128

கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இந்த நிலையில், நேற்றைய தினம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஐந்து வாக்குறுதிகளுக்கு கையொப்பமிட்டு ஒப்புதல் அளித்தார். அதில் ஒன்றுதான் மகளிருக்கான இலவச பேருந்து பயணம்.

அதன்படி இன்று முதல் தமிழகத்தில் அனைத்து நகர சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் அனைவரும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.இந்த வாக்குறுதியை தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே ஸ்டாலின் வழங்கியிருந்தார். அதன்படி நேற்றைய தினம் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் போடப்பட்ட கையெழுத்துகளில் இதுவும் ஒன்று.அதேபோல ஆவின் பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விற்பனை செய்வதற்கான குறிப்புகளிலும் அவர் கையெழுத்திட்டு இருக்கிறார்.
  


மேலும் பெண்கள் தமிழகத்தின் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதைப் போல திருநங்கைகளும் அரசு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்வது தொடர்பாக பரிசீலனை செய்து கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் இருக்கின்ற நகரப் பேருந்துகளில் பெண்களை போலவே திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வேண்டும் என்று வலைதளப் பக்கத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் நலன் உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தான் திமுக அரசின் வழக்கம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.