Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!!

#image_title

25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!!! ஹேப்பி பர்த் டே டூ யூ கூகுள்!!!

உலகத்தில் பிரபலமான சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படும் வலைதளதேடு பொறியான கூகுள் தன்னுடைய 25வது ஆண்டு பிறந்தநாளை இன்று(செப்டம்பர்27) கொண்டாடுகின்றது.

வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாள்களையும் முக்கியமான தினங்களையும் முகப்பு படமாக அதாவது டூடுலாக வைத்து நமக்கு நினைவுபடுத்தும். அந்த வகையில் இன்று(செப்டம்பர்27) கூகுள் தன்னுடைய பிறந்தநாளையே நமக்கு நினைவுபடுத்தி உள்ளது.

அமெரிக்கா நாட்டின் ஸ்டான் போர்டு பல்கலைகழகத்தில் பயின்ற மாணவர்கள் வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய இருவரும் சேர்ந்து 25 ஆண்டுகளுக்கு முன்னர் கூகுளை உருவாக்கினர். இவர்கள் இருவரும் கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்கள்.

வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் இருவரும் தங்களுடைய புராஜெக்ட்டுக்காக இந்த ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்து உருவாக்கினார்கள். முதலில் நூலகத்தில் இருக்கும் ஆவணங்கள், நூல்கள் ஆகியவற்றை தேடுவதற்காக உருவாக்கப்பட்டது. இது தான் இன்றைய உலகில் மிகப் பெரிய ஆலமரம் போலீஸ் வளர்ந்து உலகத்தின் நம்பர் 1 தேடுதளமான கூகுளாக வளர்ந்து நிற்கின்றது.

கூகுள் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அமெரிக்கா நாட்டின் காலப்போர்னியாவில் உருவாக்கப்பட்டது. பின்னர் வருடங்கள் வளர வளர கூகுள் தன்னுடைய அடுத்தடுத்த சேவைகளை உருவாக்க தொடங்கியது. அதன்படி 2004ம் ஆண்டு ஜிமெயில் சேவை உருவாக்கப்பட்டது. தற்பொழுது வரைக்கும் 170க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் நிறுவனம் வாங்கியுள்ளது.

கூகுள் நிறுவனம் டேட்டா பாதுகாப்பிற்காக உலகம் முழுவதும் பல இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்துள்ளது. கூகுள் மூலமாக ஒரு நாளில் 100 கோடிக்கும் மேல் தேடல்கள் நிலவி வருகின்றது. அது மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல் வசதிகள் மேற்கெள்ளலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கூகுள் நிறுவனத்தில் 53000க்கும் மேற்பட்டோர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று(செப்டம்பர்27) கூகுள் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது. 25வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுளுக்கு சமூக வலைதளத்தில் மூலமாக பயனர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version