கடந்த சில நாட்களுக்கு முன்பு 59 சீனா ஆண்ட்ராய்டு செயலிகள் ஆபத்தானவை என்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.அவ்வப்போது கூகுள் நிறுவனமும் தகவல் திருடும் ஆபத்தான அமைப்புகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி வருகின்றது அதனடிப்படையில் தற்போது 25 செயலிகளை டெலிட் செய்யுமாறு கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இதன் மூலம் பயனாளர்களின் தகவல் திருடப்படுவதாக கூகுள் நிறுவனம் கூறுகிறது.
அதனடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 25 செயலிகளும் ஆபத்தானவை என்று அதனை டெலிட் செய்யுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது
Super Wallpapers Flashlight, Padenatef, Wallpaper Level, Contour Level wallpaper, iPlayer & iWallpaper, Video Maker, Color Wallpapers, Pedometer,Powerful Flashlight, Super Bright Flashlight, Super Flashlight, Solitare Game, Accurate scanning of QR code, Classic card game, Junk file cleaning, Synthetic Z, File Manager, Composite Z, Screenshot Capture, Daily Horoscope Wallpapers, Wuxia Reader, Plus Weather,Anime Live Wallpaper, Health Step Counter ஆகிய செயலிகள் பயனாளர்களின் மொபைலில் இருந்தால் அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் எனத் எச்சரித்துள்ளது.இருக்கும் எல்லா செயலிகளையும் டெலிட் செய்துவிட்டால் என்னதான் பயன்படுத்துவது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.