லாஸ்லியாவின் கூகுள் குட்டப்பா படத்தின் ஃப்ர்ஸ்ட் போஸ்டரை வெளியிட்ட நடிகர் சூர்யா!!

0
205

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

சூரஜ் வெஞ்சரமூடு, சௌபின் ஷாகீர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் ஒடிடி வலைத்தளங்களில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கேஎஸ் ரவிக்குமார் வாங்கியுள்ளார்.

இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு மற்றும் கே எஸ் ரவிக்குமார் நடிக்கின்றனர். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர் சபரி சரவணன் இயக்கியுள்ளார். தமிழில் இந்த படத்திற்கு கூகுள் குட்டப்பா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார.