Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்க 75 ஆயிரம் கோடி முதலீடு; – கூகுள் சுந்தர்பிச்சை

இந்த ஆண்டிற்கான கூகுள் இந்தியா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை கூட்டு முதலீடு, செயல்பாட்டு உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் முதலீடுகள் ஆகியவற்றின் மூலம் இதைச் செய்வோம் என்று கூறினார்.

 

இந்தியாவை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் டிஜிட்டல் மயமாக்க கூகுள் நிறுவனத்தின் சார்பில் 75,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறியுள்ளார். இந்திய தேசத்தை நவீன மயமாக்குவதில் முக்கிய நான்கு பகுதிகளில் இந்த முதலீடு இருக்கும் என்ற தெரிவித்தார். இது மட்டுமல்லாது 2.6 சிறுகுறு தொழில் நிறுவனங்களை ஆன்லைன் பிசினஸ் செய்ய வைப்பதை இலக்காக கூகுள் கொண்டுள்ளது.

 

கூகுள் நிறுவனத்தின் இந்த செயல்பாட்டின் மூலம் வருங்கால இந்தியாவில் குறிப்பிட்ட பகுதிகள் நவீனமாக மாறும் என்பதில் மாற்று கருத்தில்லை.

Exit mobile version