Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூகுள் நிறுவனத்தின் புதிய பள்ளிகள்! இந்தியாவில் தொடக்கம்!

Google's new schools! Start in India!

Google's new schools! Start in India!

கூகுள் நிறுவனத்தின் புதிய பள்ளிகள்! இந்தியாவில் தொடக்கம்!

உலகில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான  Alphabet-இன் கீழ் இயங்கும் நிறுவனம் கூகுள்.   ஒவ்வொரு ஆண்டும் கூகுள் ஐ/ஓ என்ற வருடாந்திர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது. கொரோனா பரவால் காரணமாக இரண்டு ஆண்டுகள் காணொளி காட்சி வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டு வந்தது.கூகுள் I/O 2022 சிறப்பம்சமான அறிவிப்பு ஆண்ட்ராய்டு 13 ஆக இருக்கும். புதிய ஆண்ட்ராய்டு 13 அம்சங்கள் கூகுள் I/O 2022 வெளியானது. இந்த நிறுவனமானது ஏற்கனவே பிக்சர்ஸ் ஸ்மார்ட்போன்களாக ஆண்ட்ராய்டு 13 பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாட்ஸ் ஆப். பேஸ்புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஆப்களில் புதிய புதிய அப்டேட்டுகளை கொண்டுவருகிறது. மிகப்பெரிய டிஜிட்டல் வர்த்தக மையமாக திகழும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் புதிய திட்டத்துடன்  கலம்மிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இந்திய வர்த்தக சந்தையில் தனது இருப்பை நிலை நிறுத்த புதிய யுத்திகளை கூகுள் நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்தியா பெரும் அளவு ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களை கொண்டுள்ள இந்திய சந்தையில் ஸ்டார்ட் நிறுவனங்களுக்கான பள்ளியை தொடங்கியுள்ளது. கூகுள் வர்த்தக சந்தையின் அடிமட்டத்தை சேரும் வகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில்  இந்த முயற்சி தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 90 சதவீதம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி ஐந்தாண்டுக்குள் தோல்வியில் முடிந்து வருகிறது. நடந்து வரும் நிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் மற்றும் டெக்னாலஜி தொடர்பான டூல்ஸ் குறித்து பயிற்சிகள் வழங்க கூகுள் முடிவு செய்துள்ளது. மேலும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் கொண்ட இந்த பயிற்சியில் கூகுள் நிறுவன மொத்த ஊழியர்களும் துறை சார்ந்த வல்லுனர்களும் பங்கேற்று பயிற்சிகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈ-காமர்ஸ், மொழி, சோசியல் மீடியா, நெட்வொர்க்கிங் மற்றும் ஷாப் சர்ச் பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 70 ஆயிரம் ஸ்மார்ட் ஆப் நிறுவனங்கள் உள்ளன இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சியில் கூகுள் நிறுவனம் இறங்கியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version