நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

0
294
Gooseberry leaves alone are enough!! You will never get gray hair!!

நெல்லிக்காய் இலை மட்டும் போதும்!! உங்களுக்கு நரைமுடியே வராது!!

தலைமுடியை கருமையாக்க இந்த இலை மட்டும் போதும். வயதாவதால் ஏற்படும் நரைமுடி, இளநரை என இரண்டையும் சரி செய்யும். தலை முடி உதிர்தல், தலை முடி மீண்டும் வளர இந்த இலை உதவுகிறது. இதனுடைய காய்களும் முடி வளர்ச்சிக்கு உதவும். அது நெல்லிக்காய் மற்றும் நெல்லி இலைகள் தான்.

நெல்லிக்காய் எப்படி கூந்தலின் வளர்ச்சிக்கு உதவி, நரைமுடியை போக்குகிறதோ அதே போல் நெல்லி இலைகளுக்கும் இந்த தன்மைகள் உள்ளது. இந்த நெல்லி இலைகளில் மெலனின் மற்றும் விட்டமின் C உள்ளதால் நரைமுடியை எளிதாக கருமையாக்கும்.

இந்த நெல்லி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளுங்கள். பெண்களாக இருந்தால் 2 கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள். கருஞ்சீரகம் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கருஞ்சீரகமும் நரையை போக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

அடுத்ததாக விட்டமின் E கேப்சூல் ஒன்றும், கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் இவை அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். இதை தலைமுடிகளின் வேர்க்கால்களில் நன்றாக படுமாறு தடவிக் கொண்டு 1 மணி நேரம் ஊறவிடவும். பிறகு தலைக்கு குளிக்கவும். இதை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தினால் ஒரு மாதத்தில் பலன் தெரியும்.