வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்!

0
93
#image_title

வயிறு சம்பந்தப்பட்ட நோயை போக்கும் நெல்லிக்காய் துவையல்!

ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் 3 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அது உண்மைதான். ஏனென்றால், நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் உட்பட எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துவார்கள்.

மேலும், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியம் வகிக்கும். நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும். நெல்லிக்காய் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் நினைகிறார்கள். ஆனால், நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டால் ஜலதோஷம் வராமல் தடுக்கும்.

சரி… நெல்லிக்காயை வைத்து எப்படி நெல்லிக்காய் துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
காய்ந்த மிளகாய் – 8
பெருங்காயத்தூள் – அரை  ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – அரை ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை

பெரிய நெல்லிக்காயை நன்றாக சுத்தம் செய்து, அதில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

இதன் பின்னர், நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை மிக்சியில் போட்டு, அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்து இறக்கினால் சுவையான நெல்லிக்காய் துவையல் ரெடியாகி விடும்.