உங்களுடைய பேவரைட் உடையில் அழுக்கு கறை படிந்து விட்டதா? ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் போதும் எப்பேர்ப்பட்ட கறையும் காணாமல் போய்விடும்!!

0
122
Got a dirty stain on your favorite dress? A spoonful of toothpaste is enough to make any stain disappear!!

உங்களுடைய பேவரைட் உடையில் அழுக்கு கறை படிந்து விட்டதா? ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் போதும் எப்பேர்ப்பட்ட கறையும் காணாமல் போய்விடும்!!

உங்களில் பலருக்கு துணி துவைப்பது என்பது பிடிக்காத விஷயமாக இருக்கும்.அதிலும் கறை படிந்த துணிகளை துவைப்பது என்பது சற்று கடினமான செயல்.

இந்த கறை படிந்த துணிகளை என்னதான் கை வலிக்க துவைத்தாலும் எளிதில் கறை போகாது.அதுவும் நமக்கு பிடித்த உடை என்றால் மனம் மிகவும் வருந்தும்.கறை படிந்த துணிகளை துவைக்க சளித்துக் கொண்டு தூக்கி எரியாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள ட்ரிக்கை பயன்படுத்தி எளிதில் கறைகளை நீக்குங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)டூத் பேஸ்ட்
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி டூத் பேஸ்ட் போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.இதை துணியில் உள்ள கறைகள் மீது ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு ஒரு பிரஷ் கொண்டு துணியை தேய்த்தால் படிந்து கிடந்த கறை எளிதில் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)சோப் தூள்
2)சோடா உப்பு
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சோப் தூள்,ஒரு தேக்கரண்டி சோடா உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கலந்து கொள்ளவும்.

இதை கறை படிந்த துணிகளின் மீது ஊற்றி 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பிறகு ஒரு துணி பிரஷ் கொண்டு கறைகள் மீது தேய்த்தால் நீண்ட நாட்களாக படிந்து கிடந்த கறை எளிதில் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)வாஷிங் லிக்விட்
2)எலுமிச்சை சாறு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வாஷிங் லிக்விட் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த கலவையை கறை படிந்த துணிகள் மீது ஊற்றி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் தேய்த்தால் கறைகள் முழுமையாக நீங்கி விடும்.