வளர்ந்து வரும் உலகில் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது.முன்பெல்லாம் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுக்க மற்றும் பணம் செலுத்த வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது.ஆனால் தற்பொழுது டெபிட் கார்டு இருந்தால் ATM-ல் இருந்து நிமிடத்தில் பணம் எடுத்துவிடலாம்.
இன்று அனைவரும் டெபிட் கார்டு பயன்படுத்தி வருகின்றனர்.இப்படி டெபிட் கார்டு பயன்படுத்தி ATM இல் இருந்து பணம் எடுக்கும் பொழுது சில சமயம் கிழிந்த நோட்டுகள் வெளிவரும்.இந்த கிழிந்த நோட்டுகளை பயன்படுத்த முடியாது என்பதால் சிக்கல் ஏற்படுகிறது.இதனால் இந்த கிழிந்த நோட்டுகளை நல்ல நோட்டாக மாற்றிவிட வேண்டும்.
ATM இல் இருந்து பணம் எடுக்கும் போது கிழிந்த அல்லது சிதைந்த நோட்டுகள் வந்தால் நீங்கள் எந்த ATM இல் பணம் எடுத்தீர்களோ அந்த வங்கிக்கு சென்று லெட்டர் எழுதி கொடுக்க வேண்டும்.நீங்கள் கொடுக்கும் விண்ணப்பத்தில் பணம் எடுத்த நேரம் தேதி,இடம் மற்றும் பணம் எடுத்ததற்கான ரசீது மற்றும் கிழிந்த நோட்டு உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும்.உங்களிடம் பணம் எடுத்ததற்கான ரசீது இல்லையென்றால் உங்கள் மொபைலில் உள்ள குறுஞ்செய்தி விவரங்களை அதில் கொடுக்க வேண்டும்.
வங்கி தரப்பில் உங்கள் விண்ணப்பம் ஆய்வு செய்யப்படும்.பிறகு சம்மந்தப்பட்ட வங்கியானது கிழிந்த நோட்டுகளுக்கு பதில் நல்ல நோட்டுகளை உங்களுக்கு வழங்கும்.இந்த முறையில் நீங்கள் கிழிந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்