உங்கள் கால் விரல்களில் சேற்றுப்புண் வந்துவிட்டதா? இந்த இரண்டு பொருட்களை வைத்து உடனடி தீர்வு காணுங்கள்!!

0
64
Got calluses on your toes? Get an instant solution with these two products!!

பருவமழை காலங்களில் வரக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று சேற்றுப்புண்.தேங்கி நிற்கும் மழைநீரில் நுண் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிகமாக தேங்கியிருக்கும்.இந்த மழை நீரில் கால்களை வைப்பதால் கால் விரல் இடுக்குகளில் கொத கொதவென்று புண்கள் உருவாகி அரிப்பு,எரிச்சலை ஏற்படுத்தும்.

இந்த சேற்றுப்புண் பாதிப்பை அலட்சியப்படுத்தினால் அதன் பாதிப்பு அதிகமாகி கடுமையான தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும்.சிலருக்கு நடக்க முடியாத அளவிற்கு சேற்றுப்புண் பாதிப்பு இருக்கும்.

குறிப்பாக சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சேற்றுப்புண் அவ்வளவு எளிதில் குணமாகாது.இந்த சேற்றுப்புண் பாதிப்பை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து குணமாகி கொள்ள முடியும்.

1)விளக்கெண்ணெய்
2)மஞ்சள் தூள்

அடுப்பில் வாணலி ஒன்றை 50 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து ஆறவிட்டு கால்களில் பூசி வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.

1)வேப்பிலை
2)மஞ்சள்

சிறிதளவு வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து மஞ்சள் தூள் கலந்து கால் இடுக்குகளில் அப்ளை செய்து வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

1)உப்பு
2)தண்ணீர்

ஒரு அகலமான பாத்திரத்தில் வெது வெதுப்பான தண்ணீரை ஊற்றி கல் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.பிறகு கால்களை அதில் வைத்து சிறிது நேரம் ஊறவிடவும்.பின்னர் பிரஷை வைத்து கால்களை சுத்தம் செய்யவும்.

தினமும் இரவு தூங்குவதற்கு முன் உப்பு கலந்து நீரில் கால்களை மசாஜ் செய்து வந்தால் சேற்றுப்புண் குணமாகும்.

1)மருதாணி இலை
2)மஞ்சள் தூள்

கைப்பிடி மருதாணி இலையை அரைத்து மஞ்சள் கலந்து கால் இடுக்குகளில் பூசி வந்தால் சேற்றுப்புண் பாதிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும்.

1)தேங்காய் எண்ணெய்
2)மஞ்சள்

ஒரு தேக்கண்டி தேங்காய் எண்ணெயில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து கால் இடுக்குகளில் பூசினால் சேற்றுப்புண் ஆறும்.