Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தியது செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் வாழ்ந்து வந்த போயஸ் தோட்டத்தில் இருக்கக்கூடிய வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அப்போதைய அதிமுக அரசு முடிவெடுத்தது.

இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட தமிழக அரசு வேதா நிலையத்தையும், அங்கே இருக்கக்கூடிய ஆசையும் சொத்துக்களையும், அரசுடமை ஆக்கியது. இதற்காக பல அரசு ஆணைகள் பிறப்பித்து இருந்தது.

இதனை எதிர்க்கும் விதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் உள்ளிட்டோர் தனித்தனியே மூன்று வழக்குகளை தாக்கல் செய்து இருந்தார்கள்.

இந்த வழக்கை நீதிபதி சேஷசாயி விசாரணை செய்தார். அப்போது தீபா மற்றும் தீபக் சார்பாக வழக்கறிஞர்கள் சுதர்சனம், சுந்தரராஜன் தொண்டன் சுப்பிரமணியன், உள்ளிட்டோர் ஆஜராகி மனுதாரர்கள் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகள் தனிநபர் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது, அது தொடர்பாக சட்டம் இயற்ற அரசுக்கு அனுமதி இல்லை. வேதா நிலையத்தை அரசுடமை ஆக்கி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும், வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற தடை விதிக்க வேண்டும், வாரிசுகளாக அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மனுதாரர்கள் இடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சொத்திற்கு 67.90 கோடி ரூபாய்க்கு இழப்பீடு நிர்ணயம் செய்து அந்த தொகையை சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் தமிழக அரசு வழங்கி இருப்பது விரோதமான செயல் என்று வாதிட்டார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் அப்போதைய அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ் ஆர் ராஜகோபால், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த சூழ்நிலையில், இந்த தீர்ப்பை நீதிபதி நேற்றையதினம் வழங்கியிருக்கிறார் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இந்த சொத்துக்கு அதிபதியான ஜெயலலிதா சாதாரண நபர் இல்லை, நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்து படிப்படியாக முன்னேறி இருக்கிறார், முதலமைச்சர் பதவியை வகித்தவர், திருமணம் ஆகாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசு, இல்லை அரசு முறையில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்த சமயத்தில் இறுதிச்சடங்கை மனுதாரர் தீபக் தான் செய்தார் என்று கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட மனுதாரர் ஜெயலலிதாவின் வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த சமயத்தில் அதனை வட்டாட்சியர் வழங்க மறுத்து நீதிமன்றத்தை அணுகுமாறு கடந்த 2017ஆம் வருடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் தெரிவித்த காரணம் என்னவென்றால், ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ் தீபக் வசம் இல்லை அதனை அவர் தாக்கல் செய்யவில்லை என்பது தான் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, தேவையின்றி அவர் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு நடுவில் அதிமுகவின் நிர்வாகிகள் புகழேந்தி ஜானகிராமன், உள்ளிட்டோர் நிலையத்தின் நிர்வாக அதிகாரம் வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கு தனி நீதிபதி தள்ளுபடி செய்யப்பட்டாலும் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கேசவ பிரசாத் சிங் வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி பிரச்சனைக்குரிய நிலமாக இருந்தாலும், அதனை பொது பயன்பாட்டிற்காக கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று அரசு தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். ஆனால் அந்த வழக்கில் யார் பிரச்சனை? செய்வது பிரச்சனை எங்கே இருந்து ஏற்பட்டது? என்ற கேள்விகள் எழ செய்கிறது.

அப்போதைய தமிழக அரசையும், அதிமுகவின் நிர்வாகிகளையும், தவிர்த்து வேறு யாரும் ஜெயலலிதாவின் இல்லத்தின் மீது உரிமை கூற முன்வரவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் பொது பயன்பாட்டுக்கு ஒரு சொத்தை அரசு கையகப்படுத்தினால் சட்ட விதிகளின்படி 60 நாட்களுக்கு முன்பு உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி அவருடைய முன்னிலையில் தான் கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் இல்லத்திற்கு தீபாவும் தீபக்கும் உரிமையாளர்கள் இல்லை வேதங்களையும் யாருடைய சொத்தும் இல்லை அதற்கு வாரிசு இல்லை என்பது ஒன்றுதான் அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சி தங்களுடைய தலைவரை கௌரவப் படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எல்லாம் புரிந்து கொள்ளக்கூடியது தான், இருந்தாலும் இந்த வழக்கில் தலைவியின் வீட்டில் உரிமையையே வேறுபடுத்திக் காட்டி இருக்கிறார்கள்.

வேதா நிலையத்தில் சென்ற வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் வீட்டின் சாவியைச் சென்னை மாவட்ட ஆட்சியர் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

முன்னரே ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பல கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது அங்கிருந்து ஒரு சில மைல் தூரத்தில் இருக்கக்கூடிய போயஸ் தோட்டத்தில் எதற்காக இன்னொரு நினைவிடம் அமைக்க வேண்டும்? இதன் காரணமாக, பொதுமக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது. அப்படியென்ன ஜெயலலிதாவின் ஒரு செய்தியை மெரினா கடற்கரையில் இருக்கின்ற நினைவிடம் சொல்லாமல் வேதா நிலையம் மட்டும் சொல்கிறது?

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் பல நலத் திட்டங்களை மேற்கொண்டு இருக்கிறார் என்று அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அவர் ஆட்சியில் இருந்த சமயத்தில் அவருடைய தனிப்பட்ட பண்புகள் தொடர்பாக ஆராய இந்த நீதி மன்றம் விரும்பவில்லை. அவர் என்ன வேண்டுமென்றாலும், செய்திருக்கட்டும் எதற்காக இரண்டாவது நினைவகம் எதற்காக உருவாக்கப்பட வேண்டும்? அரசு இது போன்ற பல கோடி ரூபாய் செலவு செய்ய முயற்சிக்கும் போது, இந்த நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க இயலாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அரசின் மீது பொதுமக்கள் வைக்கும் நம்பிக்கை என்பது நாட்டின் வளங்களை பாதுகாப்பது மட்டுமல்ல, பொதுமக்களின் வரிப் பணத்தையும், பாதுகாப்பதுதான். ஆகவே பல கோடி ரூபாய்க்கு இழப்பீடு வழங்கி வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்துவதில் எந்த ஒரு பொது பயன்பாடும் இருப்பதாக தெரியவில்லை என கூறப்படுகிறது.

எகிப்து நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பிரமிடுகளை அமைத்தார்கள், முகலாய பேரரசர் ஷாஜஹான் தாஜ் மஹால் கட்டினார், ஆனால் தற்சமயம் எகிப்து அந்த ஆட்சியாளர்களிடமும், இந்தியா முகலாய பேரரசர்கள் இடமும், இல்லை இந்தியா பொது மக்களுக்கு சொந்தமானது.

ஆகவே இந்த வழக்குகள் எல்லாவற்றையும், ஏற்றுக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் வேதா நிலயத்தை கையகப்படுத்தியும், இழப்பீடு நிர்ணயம் செய்தும், அரசுடமை ஆக்கியும், தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், 2020 ஆம் ஆண்டு வரை பிறப்பித்த பல உத்தரவுகளை ரத்து செய்கிறேன். இந்த சொத்துக்கு இழப்பீடு நிர்ணயம் செய்து அந்த தொகை மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது அந்த தொகை அரசு திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உத்தரவு கிடைத்த நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் வேத நிலையத்தின் சாவியை மனுதாரர்கள் இடம் சென்னை மாவட்ட ஆட்சியர் ஒப்படைக்க வேண்டும் அதேபோல ஜெயலலிதா பாக்கி வைத்திருக்கக்கூடிய வருமான வரித் தொகையை சட்டப்படி வசூல் செய்ய வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தீர்ப்பின் போது நீதிபதி சேஷசாயி கூறியிருக்கிறார்.

Exit mobile version