Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திடீரென தீப்பிடித்த அரசு பேருந்துகள்! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

திடீரென தீப்பிடித்த அரசு பேருந்துகள்! புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு சம்பவம்!

டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த 6 அரசு பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் தமிழகம் முழுவதும் 144 தடை விதித்த காரணத்தால் போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்து கழக பணிமனையில் 200 க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்படிருந்த ஒரு பேருந்தில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் வேகமாக எரிந்த தீ மளமளவென அடுத்தடுத்த பேருந்துகளில் தீப்பற்ற ஆரம்பித்தது. சம்பவத்தை அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் மற்ற பேருந்துகளுக்கும் தீ பரவாமல் நின்றது.

இந்த திடீர் தீவிபத்து சம்பவத்தில் மொத்தம் 6 அரசு பேருந்துகள் எரிந்து சாம்பலாகின. பேருந்தில் தீ எப்படி பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version