கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
121
Government bus lost control!! The accident happened to the driver who jumped out in a hurry!!

கட்டுப்பாட்டினை இழந்த அரசு பஸ்!! அவசரத்தில் வெளியே குதித்த ஓட்டுனருக்கு நேர்ந்த விபரீதம்!!

ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர்  பஸ்ஸிலிருந்து குறித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது,

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் வயது 43. இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் இவர் இன்று காலை வழக்கம் போல் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பஸ் ஒன்றினை ஓட்டி வந்துள்ளார்.

அந்த பஸ்ஸில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ்ஸானது கொண்டமநாயக்கன்பட்டி என்ற ஊரின் அருகே உள்ள ஒரு  பாலத்தை கடக்க முயற்சி செய்தது. அப்போது பேருந்து நிலை தடுமாறியதால் கட்டுப்பாட்டை இழந்தது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததை அறிந்த ஓட்டுநர் தங்கபாண்டியன் திடீரென பஸ்ஸிலிருந்து வெளியே குதித்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருக்கு தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் திடீரென குதித்ததால் நல்லதொரு வாய்ப்பாக பஸ்ஸானது சற்று தட்டு தடுமாறி அருகில் உள்ள முள்வேலி மற்றும் மரம் ஆகியவற்றின் மீது மோதி நின்று விட்டது. இதனால் அந்த பஸ்ஸில் பயணம் செய்த 30 பயணிகளுக்கும் எந்தவித பெரிய அடியும், காயமும், ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக உயிர் தப்பினர்.

பின்னர் பயணிகள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழிறங்கி லேசான அடிபட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சென்று முதலுதவி செய்து கொண்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து பஸ்ஸின் நடத்துனர் வினோத்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து குதித்ததால் உயிரிழந்த தங்கபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.