Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாற்றுத்திறனாளியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனர்! திருப்பூரில் அதிர்ச்சி!

அரசு பேருந்தில் மாற்றுத்திறனாளி பயணியை இறக்கி விட முயற்சி செய்து அவருடன் சென்ற மகனையும் நடத்துனர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் வீரபாண்டி பகுதியை சார்ந்தவர் சத்யராஜ் பானி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர். இவருக்கு தமிழக அரசின் சார்பாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதோடு அவரை வழிநடத்துவதற்கு ஒருவர் உடன் செல்லவும் அந்த பாசில் வசதி இருக்கிறது இந்த நிலையில் நேற்று மாலை சத்யராஜ் தன்னுடைய மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டி பிரிவிலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்தில் ஏறியுள்ளார்.

மனைவிக்கு பெண்களுக்கான இலவச பயணம் என்பதால் தனக்கும் தன்னுடைய மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளதாக தெரிவித்திருக்கிறார் ஆனால் நடத்துனர் முத்துக்குமார் உங்களுடைய மனைவிக்கு தான் பாஸ் இருக்கிறது. மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் தனக்குள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் சத்யராஜ். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் 3 பேரையும் கீழே இறங்கச் சொல்லி இருக்கின்றார். இதனை சத்யராஜின் 17 வயதான மகன் சிபிராஜ் வீடியோ எடுத்துள்ளார். இதன் காரணமாக, ஆத்திரமடைந்த நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சத்யராஜ் இது தொடர்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version