Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு!

Government bus seized in Erode district! Action order of the court!

Government bus seized in Erode district! Action order of the court!

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கோபியை அடுத்த புதுரோடு அருகே அவருடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து கருப்பன் மீது மோதியது.

அந்த விபத்தில் கருப்பன் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கானது கோபி சார்பு நீதிமன்றம் விசாரித்தது. மேலும் கருப்பனுக்கு  நான்கு லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை.இதைதொடர்ந்து அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version